500 பெண்களுக்கு தந்தையாக முன்னிலை வகித்த பிரதமர் மோடி!!! நெகிழ்ச்சியான தருணம்!!!

500 பெண்களுக்கு தந்தையாக முன்னிலை வகித்த பிரதமர் மோடி!!! நெகிழ்ச்சியான தருணம்!!!

குஜராத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு பிரதமர் மாநிலத்திற்கு வருவது இதுவே முதல் முறை. ஆனால் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு அவர் பலமுறை குஜராத் சென்றுள்ளார். 

மோடியின் குஜராத் பயணம்:

பிரதமர் மோடி ஒருநாள் பயணமாகவே குஜராத் சென்றுள்ளார்.  இந்நிலையில் தெற்கு குஜராத் மற்றும் சவுராஷ்டிராவுக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக செல்கிறார் மோடி.  அங்கு நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொண்டு அவர் உரையாற்றுகிறார்.  

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அவர் குஜராத்திற்கு வருவது இதுவே முதல் முறை.  ஆனால், தேர்தல் தேதிகள் வருவதற்கு முன்பே அவர் பலமுறை குஜராத் பயணம் சென்றுள்ளார்.  

500 பெண்களுக்கு தந்தையான மோடி:

குஜராத்தில் தேர்தல் பிரசாரத்தின் பரபரப்பான சூழலுக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி திருமண விழாவில் பங்கேற்கிறார்.  500 பெண்களுக்கு ஒரே நேரத்தில் நடைபெறும் மிகப்பெரிய அளவிலான நிகழ்ச்சியாகும்.  

பாஜகவின் தேர்தல் பிரச்சாரம் மற்றும் அவரது பரபரப்பான கால அட்டவணைக்கு மத்தியில் கூட பிரதமர் ஏன் திருமண விழாவில் பங்கேற்கிறார் என்பது மக்களிடையே எழும் மிக முக்கியமான கேள்வியாகும்.  

இதற்கான நெகிழ்ச்சியான பதில் திருமணம் செய்துகொள்ளும் எல்லாப் பெண்களும் தந்தையை இழந்தவர்கள் என்பதே.  தந்தையை இழந்த அனைத்து பெண்களுக்கும் தந்தையாக இருந்து திருமணத்தை முன்னிலைப்படுத்துகிறார் பிரதமர் மோடி.

-நப்பசலையார்

இதையும் படிக்க:    முறையற்ற கொலீஜியம்...தொடர்ந்தால் பிரதமர் தலையீடு இருக்கும்...மத்திய சட்டத்துறை அமைச்சர்!!!