இந்தியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள்...!

இந்தியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள்...!

அதிகாலை 04.04 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.  நிலநடுக்கத்தின் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளது.

மகாராஷ்டிராவில்:

மகாராஷ்டிராவின் நாசிக்கில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.  நில அதிர்வுக்கான தேசிய மையத்தின் நேரப்படி, அதிகாலை 04:04 மணியளவில் இந்த நடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருள் சேதம் குறித்து தேசிய நில அதிர்வு மையம் இதுவரை எதையும் உறுதி செய்யவில்லை.

அருணாச்சல பிரதேசத்தில்:

அருணாச்சல பிரதேசத்தில் இன்று காலை 7.01 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. பூகம்பத்தின் தீவிரம் 3. 8 ஆக ரிக்டர் அளவுகோலில் அளவிடப்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கம் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பாசரில் இருந்து வடமேற்கு-வடக்கு பகுதிகளில் 58 கி.மீ தொலைவில் ஏற்பட்டுள்ளது. 

-நப்பசலையார்

இதையும் படிக்க:   யுவராஜ் சிங்கிற்கு நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பிய கோவா சுற்றுலா துறை...காரணம் என்ன?