யுவராஜ் சிங்கிற்கு நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பிய கோவா சுற்றுலா துறை...காரணம் என்ன?

யுவராஜ் சிங்கிற்கு நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பிய கோவா சுற்றுலா துறை...காரணம் என்ன?
Published on
Updated on
1 min read

கோவாவில் வில்லாக்களை வணிக ரீதியாக பயன்படுத்திய விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்குக்கு கோவா சுற்றுலாத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சுற்றுலா துறையின் நோட்டீஸ்:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்குக்கு கோவா சுற்றுலாத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  யுவராஜ் சிங்கிற்கு கோவாவில் உள்ள மோர்ஜிமில் ஒரு வில்லா உள்ளது.  அந்த வில்லாவை பதிவு செய்யாமல், 'ஹோம்ஸ்டே' ஆக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.  இதனைத் தொடர்ந்து யுவராஜ் டிசம்பர் 8 ஆம் தேதி விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். 

காரணம் என்ன?:

யுவராஜ் சிங்கிற்கு கோவாவில் ஒரு வில்லா உள்ளது.  அதனை வணிக ரீதியாக பயன்படுத்தி வருகிறார்.  அவ்வாறு வணிக நோக்கில் பயன்படுத்த வேண்டுமானால் கோவா சுற்றுலா வணிகச் சட்டம், 1982ன் கீழ் பதிவு செய்ய வேண்டும்.  ஆனால் யுவராஜ் பதிவு செய்யாமலே ‘ஹோம்ஸ்டே’யாக பயன்படுத்தி வருகிறார்.

சுற்றுலா துறையின் அறிவிப்பு:

மாநில சுற்றுலாத் துறையின் துணை இயக்குநர் ராஜேஷ் காலே, வில்லா முகவரியில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.  இதில், யுவராஜ் டிசம்பர் 8ம் தேதி காலை 11 மணிக்கு நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. 

நடவடிக்கை என்ன?:

சுற்றுலா வர்த்தகச் சட்டத்தின் கீழ் சொத்தை பதிவு செய்யாதவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.  வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com