துரோகத்தால் வீழ்ந்த சிவசேனா.... மீட்டெடுப்பாரா உத்தவ் தாக்கரே!!!

உத்தவ் தாக்கரேவுடன் இருக்கும் எம்எல்ஏக்களையும் சிவசேனாவில் இணைக்க ஆயத்தம் செய்யப்பட்டு வருகிறது.

துரோகத்தால் வீழ்ந்த சிவசேனா.... மீட்டெடுப்பாரா உத்தவ் தாக்கரே!!!

தேர்தல் ஆணையம் அதன் முடிவை அறிவித்த பிறகு, புதிய திட்டம் வகுப்பதில் ஏக்நாத் ஷிண்டே தரப்பு ஈடுபட்டுள்ளது. 

அரசியல் எதிர்காலம்:

மத்திய தேர்தல் ஆணையத்தின் முடிவால் மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள அதே நேரத்தில், உத்தவ் குழுவின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம். பி.க்களை குறுக்கு வழியில் கட்சியில் இணைப்பதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது ஷிண்டே அணி.

அதாவது ஷிண்டே சிவசேனாவின் சட்டங்களை பிறப் பித்த பிறகு சட்டமன்ற உறுப் பினர்கள் அவர்களுடன் இணையவில்லையென்றால், அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு சட்டமன்ற உறுப் பினர் பதவியை இழக்க நேரிடும்.

புதிய திட்டம்:

”நாங்கள் ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.  தாக்கரேவுடன் இருக்கும் எம்எல்ஏக்களை சிவசேனாவில் இணைக்க ஆயத்தம் செய்யப்பட்டு வருகிறது.” என  ஷிண்டே அணியின் உறுப் பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.  இது உத்தவுக்கு மற்றொரு பெரிய அடியாக இருக்கும். 

கட்சி தொடங்கிய போது:

1966-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி சிவசேனா கட்சி உருவானபோது இருந்த இடத்தை இப்போது மீண்டும் அடைந்துவிட்டதாக உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.  கட்சி உருவான போது சிவசேனாவுக்கு கவுன்சிலரோ, எம்எல்ஏவோ இல்லை.  எனவே அவர்கள் மீண்டும் முதலில் இருந்தே ஆரம் பிக்க வேண்டிய சூழலில் உள்ளனர்.  

இதற்கிடையில், உத்தவ் அணியின் இரண்டு எம். பி.க்கள் மற்றும் 10 எம்.எல்.ஏக்கள் விரைவில் அவரை விட்டு வெளியேறுவார்கள் என்று ஷிண்டே பிரிவு எம். பி கிர்பால் துமானே சனிக்கிழமை கூறியிருந்தார்.  தற்போது உத்தவ் உடன் 16 எம்எல்ஏக்கள் மற்றும் 5 எம் பிக்கள் உள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது.

சிவசேனா அலுவலகம் யாருக்கு?:

சிவசேனா கட்சியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் ஷிண்டே பிரிவினரால் இனி கட்டுப்படுத்தப்படும்.  ஷிண்டேவின் சிவசேனா தலைவர் ஒருவர், "நாங்கள் சிவசேனா அலுவலகங்களை ஆக்கிரமிப்போம்" என்று கூறியுள்ளார்.  ஆனால் உத்தவ் அணியினரோ அது சிவசேனாவுக்கு சொந்தமானது எனவும் உத்தவ் அணியின் கட்டுப்பாட்டின் கீழ் அப்படியே இருக்கும் என்றும் எம் பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

ஏக்நாத் ஷிண்டேவின் கோட்டையான தானேயில், சிவசேனாவைக் கட்டுப்படுத்துவதற்கான சண்டை தொடங்கிய பிறகு, இரு பிரிவுகளின் நிர்வாகிகளும் சிவசேனா கிளையைப் பயன்படுத்தினர், ஆனால் இப்போது ஷிண்டே பிரிவினர் மட்டுமே அதைப் பயன்படுத்துவார்கள். 

-நப்பசலையார்

இதையும் படிக்க:    நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல்நலக்குறைவால் காலமானார்....!