நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல்நலக்குறைவால் காலமானார்....!

நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல்நலக்குறைவால் காலமானார்....!

பிரபல நகைச்சுவை நடிகை மயில்சாமி உடல் நலக்குறைவால் காலமானார். தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகர் மயில்சாமி. 

1965-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்தவர் மயில்சாமி.  1984-ம் ஆண்டு தாவணிக் கனவுகள் படத்தில் கும்பலோடு கும்பலாக ஒரு ஓரத்தில் நின்றிப்பார் மயில்சாமி. அதனை தொடர்ந்து 80 மற்றும் 90-களில் சிறு சிறு வேடங்களை ஏற்று நடித்தார். 

விக்ரமின் தூள் படத்தில் திருப்பதியில் லட்டுக்கு பதிலாக ஜிலேபியை பிரசாதமாக வழங்கக் கோரி சந்திரபாபு நாயுடுவே உத்தரவிட்டதாக இவர் நடித்த காமெடி காட்சி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

அதனைத் தொடர்ந்து நான் அவன் இல்லை, கில்லி, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், ரெண்டு, திருவிளையாடல் ஆரம்பம் போன்ற 200-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவையில் கலக்கி இருப்பார் மயில்சாமி.  கடைசியாக இவர் உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி, வீட்டுல விசேஷம், தி லெஜன்ட், உடன்பால் போன்ற படங்களிலும் நடித்திருந்தார்.  

சினிமாவை தாண்டி சமூகத்தில் நடைபெறும் பல சர்ச்சையான விஷயங்களுக்கு குரல் கொடுத்து வந்தவருக்கு, அரசியல் மீதும் பார்வை திரும்பியது.  விருகம்பாக்கம் தொகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டார் மயில்சாமி என்பது குறிப்பிடத்தக்கது.

சமீப காலமாக திரையிலும், பொது வெளியிலும் தோன்றாமல் இருந்து வந்த மயில்சாமிக்கு, இன்று அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார். தகவலறிந்த சினிமா பிரபலங்கள் பலரும் அவர்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

இதையும் படிக்க:    தமிழ்நாட்டில் சர்வதேச போட்டிகளுக்கு ரசிகர்கள் ஆதரவு தரவேண்டும் - உதயநிதி ஸ்டாலின் பேட்டி