கேரள அரசின் மாநில பட்ஜெட்...கேள்வி எழுப்பிய பி.சிதம்பரம்...!

கேரள அரசின் மாநில பட்ஜெட்...கேள்வி எழுப்பிய பி.சிதம்பரம்...!

கேரள அரசின் பட்ஜெட் தாக்கல் குறித்து மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான பி.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

கேரளா அரசின் பட்ஜெட் தாக்கல் :

கேரள அரசு, நேற்றைய தினம் 2023-2024 ஆம் நிதியாண்டிற்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தது. ஏற்கனவே, கேரள அரசு நிதி நெருக்கடி பிரச்னையில் தவித்து வரும் நிலையில், இந்த பட்ஜெட்டானது நிதி நிலையை சமாளிக்கும் வகையிலும், மாநில வளர்ச்சிக்கான திட்டங்களை மேம்படுத்தும் வகையிலும் அமையுமா? என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

நிதிநிலை நெருக்கடி குறித்த செய்தியை மறுத்த நிதியமைச்சர் :

ஆனால் நேற்றைய தினம் கேரள மாநில நிதியமைச்சர் கே.என்.பாலகோபால், அம்மாநில அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, கேரள மாநிலம் பெரும் கடன் சுமையில் இருப்பதாகப் பரவி வரும் செய்தியை மறுத்துள்ள அவர், போதுமான அளவில் கடன் பெறுவதற்கு உண்டான நிதி நிலை மாநில அரசுக்கு இருப்பதாகவும் தெளிவுபடுத்தி இருந்தார். தொடர்ந்து, ’கேரளாவில் தயாரிப்போம்’ (மேக் இன் கேரளா) திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடும், விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் திட்டங்களுக்காக ரூ.2000 கோடி தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க : அதிமுகவிற்கு சின்னம் இருக்கிறதா...? இடைத்தேர்தலில் தெரியும் யாருக்கு அதிக ஓட்டுன்னு...!

பட்ஜெட் குறித்த விமர்சனம் :

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கேரளாவின் மாநில பட்ஜெட் குறித்து விமர்சித்துள்ள மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான பி.சிதம்பரம், ”பணவீக்கத்தை சமாளிக்க ரூ.2000 கோடி செலவழிக்கும் சிக்கலில் இருந்து நீங்கள் ஏன் ரூ.2000 கோடி “நோஷனல்” வரிகளை விதிக்கக்கூடாது என்று கேரளா எஃபெம்க்கு கேள்வி எழுப்பிய சிதம்பரம், கேரள அரசின் பட்ஜெட் ஒரு “பாஸ்டியன் பேரம்” என்று விமர்சித்துள்ளார்.

நிதியமைச்சருக்கு அறிவுரை :

தொடர்ந்து மற்றொரு ட்விட்டில், கூடுதல் வரி மூலம் 2000 கோடி வருமானம் ஈட்டும் நிதியமைச்சர் பணவீக்கத்தை சமாளிக்க 2000 கோடி செலவிடுவதாகவும், கூடுதல் வரி வசூலிப்பதை தவிர்த்தால், இரண்டாயிரம் கோடி செலவு செய்வதையும் தவிர்க்கலாம் என்று கேரளா நிதியமைச்சர் கே.எம்.பாலகோபாலுக்கு அறிவுறுத்தி மூத்த காங்கிரஸ் தலைவர் சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.