முதலமைச்சரிடம் பேசுவதற்கு தங்களை அனுமதிக்கவில்லை...பொதுமக்கள் குற்றச்சாட்டு!

முதலமைச்சரிடம் பேசுவதற்கு தங்களை அனுமதிக்கவில்லை...பொதுமக்கள் குற்றச்சாட்டு!

கள்ளச்சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார் குப்பம்  கிராமத்தில் கடந்த 13ஆம் தேதி 45 க்கும் மேற்பட்ட நபர்கள் கள்ளச்சாராயம் அருந்தியுள்ளனர். இதனை தொடர்ந்து அவர்களுக்கு வாந்தி, கண், எரிச்சல், மயக்கம் போன்ற உடல் உபாதைகளால் பாதிப்படைந்தனர். இந்த சம்பவத்தில்  இதுவரை 12  பேர் உயிரிழந்த நிலையில் 40 க்கும் மேற்பட்டோர்  முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதையும் படிக்க : படுகர் தின விழா...பாரம்பரிய இசைக்கு நடனமாடிய அமைச்சர் ராமச்சந்திரன்...!

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், குளுக்கோஸ் மட்டுமே ஏற்றப்பட்டு வருவதாகவும், உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் முதலமைச்சரிடம் பேசுவதற்கு தங்களை அனுமதிக்கவில்லை என்றும் தங்களுடைய கோரிக்கைகள் என்னவென்று கேட்பதற்கு கூட அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்றும் குடும்பத்தினர் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.