படுகர் தின விழா...பாரம்பரிய இசைக்கு நடனமாடிய அமைச்சர் ராமச்சந்திரன்...!

படுகர் தின விழா...பாரம்பரிய இசைக்கு நடனமாடிய அமைச்சர் ராமச்சந்திரன்...!
Published on
Updated on
1 min read

உதகையில் நடைபெற்ற படுகர் தின விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு பாரம்பரிய இசைக்கு நடனமாடி கொண்டாடி மகிழ்ந்தார். 

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் தங்களுக்கு என தனி பாரம்பரியம், உடை, கலாச்சாரம் என வாழக்கூடிய படுகர் சமுதாய மக்கள் ஆண்டுதோறும் மே 15 ஆம் தேதி படுகர் தின விழாவை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் மே 15 ஆம் தேதியான இன்று இளம் படுகர் நல சங்க கட்டடத்தில் அமைச்சர் ராமச்சந்திரன் உட்பட படுகர் சமுதாய தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து படுகர் தின விழாவை கொண்டாடினர். 

முன்னதாக இளம் படுகர் நல சங்க கட்டிடத்தில் படுகர் கொடியேற்றி அவர்களது பாரம்பரிய இசைக்கு படுகர் இனத்தவர்களுடன் ஒன்றிணைந்து சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நடனமாடி, ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராமச்சந்திரன், படுகர் சமுதாய மக்கள் கூடி தங்களுக்கு என ஒரு ஆலோசனை நடத்தவும், திருமணங்கள் நடத்திக் கொள்ளவும், 1969ம் ஆண்டு முதன் முதலாக கட்டடம் கட்ட நிலம் வழங்கிய ஒரே தலைவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான் என்று பெருமிதம் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com