50 கோடிக்கும் மேல் மோசடி...தலைமறைவான குற்றவாளி...முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு கடிதம்!

50 கோடிக்கும் மேல் மோசடி...தலைமறைவான குற்றவாளி...முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு கடிதம்!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நிதி நிறுவன மோசடி செய்து குடும்பத்துடன் தலைமறைவான குற்றவாளி, முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு கடிதம் அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காடையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் கே.எம்.கே.எஸ் குளோபல் டிரேடிங் கம்பெனி  மூலம், 50 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இதையும் படிக்க : 10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்...வெளியாகும் தேதியில் அதிரடி மாற்றம்!

இதையடுத்து தலைமறைவான நாகராஜை போலீசார் தேடி வந்த நிலையில், தற்போது முதலமைச்சர் தனிபிரிவிற்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், நான் எந்த தவறும் செய்யவில்லை எனவும், எந்த பணமும் எடுத்து செல்லவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் என் மீதான புகாரை ஒரு தலைபட்சமாக பார்க்காமல், எனது பக்கம் இருக்கிற நியாயத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் வ்லியுறுத்தியுள்ளார்.