ராணி எலிசபெத் இனி தோன்றமாட்டார்..... ஆஸ்திரேலியா திட்டவட்ட அறிவிப்பு!!!

ராணி எலிசபெத் இனி தோன்றமாட்டார்..... ஆஸ்திரேலியா திட்டவட்ட அறிவிப்பு!!!

ராணி எலிசபெத்திற்குப் பிறகு, சார்லஸ் மன்னரின் படம் நோட்டில் அச்சிடப்படாது, மாறாக ஆஸ்திரேலிய பிரதிபலிப்புகளால் மாற்றப்படும்.

இனி தோன்றமாட்டார்:

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்குப் பிறகு, ஆஸ்திரேலிய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.  ராணி எலிசபெத் இனி ஆஸ்திரேலியாவின் ஐந்து டாலர் கரன்சி நோட்டில் தோன்றமாட்டார்.  அதற்கு பதிலாக ஆஸ்திரேலியா அதன் பழங்குடி கலாச்சாரத்தின் வரலாற்றை பிரதிபலிக்கும். 

ஆலோசனைக்கு பிறகு:

மத்திய அரசின் ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியாவின் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேபோல நோட்டின் மறுபக்கத்தில் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் படம் இருக்கும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 

சார்லஸ் மன்னரின் படம் அச்சிடப்படாது:

ராணி எலிசபெத்துக்குப் பிறகு, சார்லஸ் மன்னரின் படம் நோட்டில் அச்சிடப்படாது.  மாறாக ஆஸ்திரேலிய பிரதிபலிப்புகளாக மாற்றப்படும் என்று ஆஸ்திரேலியா தெளிவுபடுத்தியுள்ளது.  

கால தாமதம் இருக்கும்:

5 டாலர் நோட்டை வடிவமைப்பதில் உள்நாட்டு குழுக்களுடன் கலந்தாலோசிக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.  புதிய நோட்டை வடிவமைத்து அச்சிட பல ஆண்டுகள் ஆகும் எனவும் அதுவரை தற்போதுள்ள நோட்டுகள் தொடர்ந்து வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது ஆஸ்திரேலியா அரசாங்கம்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   காலை உணவை சாப்பிட்டு பரிசோதித்த முதலமைச்சர்......