வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் காலை உணவு திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
கள ஆய்வு:
வேலூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்நிலையில் இன்று காலை முதல் பல்வேறு பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
நேரில் பார்வை:
சத்துவாச்சாரி பகுதியில் உள்ள சி.எம்.சி.காலனி பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு காலை உணவு தயாரிக்கும் இடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உணவின் தரம்:
இதைதொடர்ந்து அப்பகுதியில் உள்ள பள்ளிக்கு சென்ற முதலமைச்சர் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரம் குறித்து கேட்டறிந்ததுடன் உணவையும் சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.
கலந்துரையாடல்:
பின்னர் அலமேலுமங்காபுரத்தில் உள்ள பள்ளிக்கு சென்ற முதலமைச்சர், பள்ளிக்கு காலை உணவு கொண்டு வரப்படும் நேரம் குறித்து பள்ளி நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். இதையடுத்து காலை உணவின் தரம் குறித்து மாணவர்களுடன் கேட்டறிந்ததுடன் உணவினையும் பரிமாறினார்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: ஓபிஎஸ் உடனான சந்திப்பு... சசிகலா குறித்து ஜெ. தீபா கூறியதென்ன?!!