இலங்கைக்கு முட்டை ஏற்றுமதி; கோழிப்பண்ணையாளர்கள் மகிழ்ச்சி!

இலங்கைக்கு முட்டை ஏற்றுமதி; கோழிப்பண்ணையாளர்கள் மகிழ்ச்சி!
Published on
Updated on
1 min read

நாமக்கலில் இருந்து இலங்கைக்கு முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுவதால் கோழிப் பண்ணையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் உற்பத்தியாகும் முட்டைகள் ஈரான், ஈராக், மஸ்கட், குவைத், சவுதி, அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளுக்கும், மலேசியாவுக்கும் கண்டெய்னர் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது ஈரான் நாட்டில் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுவதால் அரபு நாடுகளுக்கு தரைவழி மார்க்கமாக கொண்டு செல்லப்படுகிறது. இதனால், நாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்றுமதியானது சற்று குறைந்துள்ளது. 

இந்நிலையில் இலங்கையில் நிலவிய பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள கோழிப் பண்ணைகள் மூடப்பட்டுள்ளதால், முட்டையின் தேவையும் நுகர்வும் அதிகரித்துள்ளது. எனவே பிற நாடுகளை காட்டிலும் இந்திய முட்டைக்கு  குறிப்பாக நாமக்கல் முட்டையின் விலை குறைவாகவும் தரமாகவும் உள்ளதால் இலங்கை நாமக்கல் முட்டை இறக்குமதிக்கு அனுமதி அளித்துள்ளது. 

இதனால் நாமக்கல் பகுதியில் இருந்து இலங்கைக்கு அதிகளவில் மாதத்திற்கு 30 கண்டெய்னர் வரை முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாக நாமக்கல் மாவட்ட கோழிப் பணியாளர்கள் தொிவித்தனா். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com