விவேகானந்தர் இல்லம் சென்றார் பிரதமர் மோடி...!

விவேகானந்தர் இல்லம் சென்றார் பிரதமர் மோடி...!
Published on
Updated on
1 min read

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்திற்கு பிரதமர் மோடி சென்றடைந்தார்.

சென்னை - கோவை இடையேயான ‘வந்தே பாரத் ரயில்’ சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன் பின்னர், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லம் சென்றடைந்தார். அப்போது வழிநெடுகிலும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் விவேகானந்தர் இல்லத்தில் உள்ள விவேகானந்தர் திருவுருவ சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து விவேகானந்தர் இல்லத்தில் நடைபெறும் ராமகிருஷ்ணா மடத்தின் 125 வது ஆண்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு, விவேகானந்தரின் முழு உருவ சிலை நினைவு பரிசாக வழங்கப்பட்டது. மேலும் இந்த விழாவில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் புத்தகம் வழங்கிய நிலையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பிரதமர் மோடிக்கு மணிமேகலை புத்தகத்தை பரிசாக வழங்கினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com