
சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தினத்தையொட்டி காவலர்களுக்கு முதலமைச்சரின் பதக்கம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தினத்தையொட்டி முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கோவை மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன், தேனி மாவட்ட எஸ்.பி. டோங்கரே பிரவின் உமேஷ்க்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : ரயிலை கவிழ்க்க சதியா? தீவிர விசாரணையில் போலீசார்!
இதேபோன்று சேலம் ரயில்வே டிஎஸ்பி குணசேகரன், நாமக்கல் உதவி ஆய்வாளர் முருகன், நாமக்கல் முதல் நிலை காவலர் குமார் மற்றும் தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க்-குக்கு சிறப்பு பதக்கம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.