ரயிலை கவிழ்க்க சதியா? தீவிர விசாரணையில் போலீசார்!

ரயிலை கவிழ்க்க சதியா? தீவிர விசாரணையில் போலீசார்!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ரயில் தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

வேலூர் மாவட்டம் காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக 120 ரயில்கள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை, பெங்களூரு, கேரளா மற்றும் கோவை, சேலம் பகுதிகளை இணைக்கும் முக்கிய ரயில்வே பாதையாக இது உள்ளது.

இந்த நிலையில், கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த காவேரி எக்ஸ்பிரஸ் ரயில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வீரவர் கோவில் என்ற இடத்தில் சென்ற போது தண்டவாளத்தில் இருந்த கற்கள் மீது மோதியது. நல்வாய்ப்பாக ஓட்டுநரின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதையும் படிக்க : வெளுத்து வாங்கும் கனமழை...அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்...!

இதனையறிந்து அங்கு விரைந்த ரயில்வே போலீசார் மோப்ப நாய்களின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே திருச்சியில் கன்னியாகுமரி அதிவிரைவு ரயில் சென்று கொண்டிருந்த தண்டவாளத்தில் டயர்கள் வைக்கப்பட்டிருந்தது. 

இதேப்போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால், கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படுமென்றும், தண்டவாள பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.