”7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கட்டணமும் வசூலிக்கக்கூடாது” - தமிழ்நாடு அரசு உத்தரவு

”7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கட்டணமும் வசூலிக்கக்கூடாது” - தமிழ்நாடு அரசு உத்தரவு
Published on
Updated on
1 min read

மருத்துவ படிப்பில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கக்கூடாது என மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ படிப்பில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கக்கூடாது என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்கள் சேரும் வகையில், 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

மருத்துவ கல்லூரிகளில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்பில் சேரும் மாணவர்களிடையே, கல்வி கட்டணம், புத்தகம், உணவு, விடுதி உட்பட எவ்வித கட்டணத்தையும் வசூலிக்கக்கூடாது எனவும், இந்த ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவியர், ‘புதுமை பெண் திட்டம்’ நிதியுதவி உட்பட அனைத்து வித கல்வி உதவி தொகை பெறுவதற்கும் தகுதி உடையவர்கள் எனவும், அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் சில இடர்பாடுகள் இருப்பதால், கல்வி நிறுவனங்கள் கூடுதல் கவனம் செலுத்தி, அவர்களின் கற்கும் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com