சட்டமன்றத்தை கூட்ட ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்த மணிப்பூர் அமைச்சரவை...!

சட்டமன்றத்தை கூட்ட ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்த மணிப்பூர் அமைச்சரவை...!
Published on: 
Updated on: 
1 min read

மணிப்பூர் சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்று ஆளுநருக்கு அம்மாநில அமைச்சரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக, சமீபத்தில் பெண்களை நிர்வாணமாக அழைத்து செல்லும் வீடியோ வெளியாகி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கலவரத்தில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், மணிப்பூர் கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாடாளுமன்ற இரு அவைகளும் தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வரும் 21-ம் தேதி மணிப்பூர் சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் அனுசுயா உய்கேவுக்கு அமைச்சரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com