ஜி-20 என்பது உலகின் முக்கிய வளர்ந்த மற்றும் வளரும் பொருளாதாரங்களின் அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும்.
இந்தோனேசியா தற்போது ஜி-20 அமைப்பிற்கு தலைமை வகித்து கொண்டிருக்கிறது. சக்திவாய்ந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா டிசம்பர் 1 ஆம் தேதி ஏற்க உள்ளது.
இந்தியா ஜி-20 அமைப்பின் 2023ம் ஆண்டிற்கான தலைமை பொறுப்பை ஏற்கவுள்ளதையடுத்து நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டிற்கான இலச்சினை, கருப்பொருள் மற்றும் இணையதளத்தை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற நிதி ஆயோக்கின் தலைவரும் ஜி-20 ஒருங்கிணைப்பாளருமான அமிதாப் காந்த் பின்வருமாறு பேசியுள்ளார்.
”உலக நாடுகளுடன் வணிக அளவில் தொடர்பு கொள்வதற்கான அரிய வாய்ப்பு. இதை இந்தியா நிச்சயம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.” என கூறினார்.
அதனோடு “ ஜி-20 என்பது அரசாங்கத்துக்கானது மட்டுமல்ல. ஒவ்வொரு தனிநபருக்குமானது. நீங்கள் வளர்ந்து செழிக்காவிட்டால் இந்தியா முன்னேறாது” என அறிவுறுத்தினார் அமிதாப்.
இந்தியா முப்பது ஆண்டுகளுக்குள் 9 முதல் 10 சதவீதம் வரை வளர வேண்டுமென்றால் நம் ஒவ்வொருவரின் வளர்ச்சியும் 30 முதல் 40 சதவீதம் வரை இருக்க வேண்டும். இதுவே நம் ஒவ்வோருவரின் முன் உள்ள மிகப்பெரிய சவால் எனத் தெரிவித்தார் அமிதாப் காந்த்.
தொடர்ந்து பேசிய அமிதாப், “ஜி-20 வாய்ப்பை பயன்படுத்தி அனைவரும் அவர்களது துறையில் முன்னேற வேண்டும். இது நமக்கு கிடைக்காத ஒரு அரிய வாய்ப்பு. உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் இந்தியா ஜி-20 தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது நாட்டின் ஒவ்வொரு சவாலையும் ஒரு வாய்ப்பாக மாற்றும்” எனத் தெரிவித்தார்.
”உலக நாடுகளுடன் வணிக அளவில் தொடர்பு கொள்வதற்கான அரிய வாய்ப்பு. இதை இந்தியா நிச்சயம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.” என தெரிவித்தார்.
மேலும், ”நாடு பொருளாதார வளர்ச்சி காண ஒரு அம்பானி, ஒரு அதானி போதாது. இந்தியா வளர பெருமளவிலான தொழிலதிபர்கள் தேவை. ” எனக் கூறினார்.
தொழில்துறை பங்குதாரர்களிடம் தொடர்ந்து பேசிய அமிதாப், “இந்தியாவின் வளர்ச்சிக்கு 10,000 அம்பானிகளும் 20,000 அதானிகளும் தேவை” எனத் தெரிவித்தார்.