கோயில்களை சேதப்படுத்திய மர்ம நபர்கள்.... தேடும் பணி தீவிரம்...

கோயில்களை சேதப்படுத்திய மர்ம நபர்கள்.... தேடும் பணி தீவிரம்...

வங்காளதேசத்தில் 14 இந்து கோயில்களில் உள்ள சாமி சிலைகளை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தந்தலா யூனியன் பகுதியில் சிந்தூர்பிந்தி என்ற இடத்தில் உள்ள கோயிலில் 9 சிலைகள், கலேஜ்பாரா பகுதியில் உள்ள கோயிலில் 4 சிலைகள் மற்றும் நாத்பாரா பகுதியில் உள்ள 12கோயில்களில் இருந்த 14 சிலைகள் சூறையாடப்பட்டுள்ளது.  வார இறுதி விடுமுறை நாட்களில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர். 

சாமி சிலைகளை சேதப்படுத்தி குளங்கள், சாலைகளில் வீசி சென்ற மர்ம நபர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க:   கொரோனாவிலிருந்து மீண்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு.....