அமெரிக்காவில் பழங்குடியினர் மீது துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்கள்!!!

அமெரிக்காவில் பழங்குடியினர் மீது துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்கள்!!!

துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதையடுத்து சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீஸார் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில், இருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஒரு போலீஸ் அதிகாரி காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சந்தேகித்த மூன்று நபர்களில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தகவலின்படி, வாஷிங்டனின் வடகிழக்கில் ஹட்சன் ஆற்றின் கரையில் அமைந்துள்ள கொல்வில்லி பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் மர்ம நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஒரு போலீஸ் அதிகாரி காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி அமெரிக்க செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதையடுத்து சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீஸார் தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். கொல்வில்லே பகுதியானது பழங்குடியினர் வாழும் பகுதி. சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மூவரில் இருவர்   கைது செய்யப்பட்டுள்ளனர்.  தப்பி சென்ற நபரை போலீஸார் தேடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க:   டெட் தேர்வு அநீதியை எதிர்த்து போராட்டம்!!! நள்ளிரவில் கைது செய்த போலிஸார்!! கண்டனம் தெரிவித்த ஸ்மிருதி!!