டெட் தேர்வு அநீதியை எதிர்த்து போராட்டம்!!! நள்ளிரவில் கைது செய்த போலிஸார்!! கண்டனம் தெரிவித்த ஸ்மிருதி!!

டெட் தேர்வு அநீதியை எதிர்த்து போராட்டம்!!! நள்ளிரவில் கைது செய்த போலிஸார்!! கண்டனம் தெரிவித்த ஸ்மிருதி!!

போராட்டக்காரர்களுடன் சில சாமானியர்களும் ஏன் கைது செய்யப்பட்டனர்? முதலமைச்சரின் ஊழல், அநீதி மற்றும் தவறான நிர்வாகத்தை ஒட்டுமொத்த நாடும் பார்த்துக் கொண்டிருக்கிறது.  

விண்ணப்பத்தாரர்கள் போராட்டம்:

மேற்கு வங்காளத்தில், தொடக்க ஆசிரியர்கள் பணி நியமனத்தில் முறைகேடுகளுக்கு எதிராக கொல்கத்தாவில் இரவு உண்ணாவிரதம் இருந்த டெட் தேர்வர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய மம்தா அரசை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விமர்சித்துள்ளார்.  

மேலும் பேசிய அவர் வங்காளத்தில் உள்ள போலீசார் நாட்டின் சட்டம் மற்றும் அரசியலமைப்புக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

முதலமைச்சர் தரப்பில் எந்த தவறும், அநீதியும் நடக்கவில்லை என்றால், நள்ளிரவில் போலீசார் ஏன் போராட்ட இடத்திற்கு வர வேண்டும்?  முதலமைச்சர் வேலை கொடுப்பதற்கு பதிலாக ஏன் லத்தி சார்ஜ் செய்கிறார்? போன்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.

சாதாரண மக்கள் ஏன் கைது செய்யப்பட்டார்கள்?:

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறுகையில், ”போராட்டக்காரர்களுடன் சில சாமானியர்களும் ஏன் கைது செய்யப்பட வேண்டும்.   இது அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம்.  எனவே முதலமைச்சரின் நடவடிக்கையானது எந்த அரசியல் கட்சியின் மீதானதும் அல்ல.  மாறாக இது சாமானிய மக்கள் மீதானது.” என்றார்.  

மேலும் ” முதலமைச்சரின் ஊழல், அநீதி மற்றும் தவறான நிர்வாகத்தை ஒட்டுமொத்த நாடும் பார்த்துக் கொண்டிருக்கிறது.” என்றும் தெரிவித்தார்.  

காவல்துறைக்கு அவமானம்:

மேலும் “ உண்ணாவிரதம் இருந்த டெட் தேர்வர்களை இரவு இருளில் ரகசியமாக போலீஸை அனுப்பி வலுக்கட்டாயமாக துரத்துவது அநீதி.   மாணவர்களின் அமைதியான கோரிக்கை போராட்டத்தின் மீது இதுபோன்ற வெட்கக்கேடான தாக்குதலுக்கு மம்தா பானர்ஜி மற்றும் இங்குள்ள காவல்துறையை பார்த்து வெட்கப்படுகிறோம்”என்று தெரிவித்துள்ளார்.  

தொடர்ந்து பேசிய இரானி, “ தற்போது வங்காளத்தில் என்ன நடக்கிறதோ, அது இன்றுவரை எங்கும் நடக்கவில்லை.  இதுபோன்ற செயல்களுக்கு மாநில அரசு நிச்சயமாக பதில் கூற வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

கடந்த எட்டு ஆண்டுகளாக..:

”கடந்த 8 ஆண்டுகளாக டெட் தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் தங்கள் உரிமைகளை கோரி வருவதாகவும், ஆனால் இந்த எதேச்சதிகார அரசு அவர்களைப் பற்றி கவலைப்படவில்லை” என்றும் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.

மேலும், “முன்னாள் கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி தேர்வில் முறைகேடு செய்து பணம் வாங்கிய போது மாண்புமிகு முதலமைச்சர் என்ன செய்து கொண்டிருந்தார்” என்று கிண்டலாக கேள்வியெழுப்பியுள்ளார்.  

ஆட்சியை இழப்பாரா மம்தா?:

”வங்காள மக்களுக்கு இப்போது எல்லாம் தெரியும் இதனால் திதி விரைவில் ஆட்சியை இழக்க நேரிடும்” என்றும் ஸ்மிருதி கூறியுள்ளார்.  மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பஞ்சாயத்து தேர்தலில் பாஜக வலுவாகப் போராடும் என்றும் இரானி தெரிவித்துள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  தீபாவளிக்கான இந்திய ரயில்வேயின் சிறப்பு ஏற்பாடுகள்..வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்!!!