புதுச்சேரி : பிரபல ரவுடி மீது கொலை வெறி தாக்குதல்...கொலைக்கு உடந்தையான திருநங்கை...

புதுச்சேரி : பிரபல ரவுடி மீது கொலை வெறி தாக்குதல்...கொலைக்கு உடந்தையான திருநங்கை...

புதுச்சேரியில் பிரபல ரவுடி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய திருநங்கை உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.

புதுச்சேரி உருளையன்பேட்டையை சேர்ந்தவர் குட்டி சிவா (32) பிரபல ரவுடியான இவர் நேற்று காலை ரெட்டியார்பாளையம் லாம்பர்ட் சரவணன் நகரில் திருநங்கைகள் வசிக்கும் குடியிருப்புக்கு அருகில் வெட்டப்பட்டார்,  அவருக்கு புதுவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,  இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசார்  வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த திருநங்கை தர்ஷிணி, அவரது காதலன் சக்தி, சுனில் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தியதில் குட்டி சிவாவிற்கும், பூமியன்பேட்டை அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் திருநங்கை ஒருவருக்கும் பழக்கம் இருந்துள்ளது, அந்த திருநங்கைக்கும், தர்ஷிணிக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.  இதுகுறித்து அறிந்த குட்டி சிவா, தர்ஷிணியை மிரட்டியுள்ளார்.  இது குறித்து தர்ஷிணி தனது காதலன் சிவாவிடம் கூறியுள்ளார். சிவா தனது நண்பர் சுனிலுடன் சேர்ந்து குட்டி சிவா மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக தெரியவந்ததை அடுத்து கைது செய்த மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

மேலும் தெரிந்து கொள்ள ///  ஊராட்சி மன்றத் தலைவரை வெட்டிக் கொன்ற மர்மகும்பல்...