பாஜகவிடமிருந்து ஆட்சி மாற்றத்தை விரும்பும் மேகலயா....

பாஜகவிடமிருந்து ஆட்சி மாற்றத்தை விரும்பும் மேகலயா....

Published on

மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, ஜனவரி 18ம் தேதி மேகாலயாவுக்கு செல்கிறார்.

மேகாலயா இந்த ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளது.  இதை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்கான ஆயத்த பணிகளை தொடங்கியுள்ளன.  இதனிடையே, மேகாலயா மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, “மேகாலயா மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள். அஸ்ஸாம் மற்றும் மேகாலயா இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.  இரு மாநிலங்களுக்கு இடையே நிலவும் எல்லைப் பிரச்னைக்கு அமைதியான தீர்வு காண வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com