உடல்நிலை மோசமான கிம் ஜாங் உன்....எங்கிருக்கிறார் வடகொரிய அதிபர்....

உடல்நிலை மோசமான கிம் ஜாங் உன்....எங்கிருக்கிறார் வடகொரிய அதிபர்....

வடகொரியா சர்வாதிகாரியை சமாதானப்படுத்த கிம் ஜாங் உன்னின் மனைவி மற்றும் அவரது மருத்துவர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.  மேலும் அவரை உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்தி வருகின்றனர். 

கிம் ஜாங் உன்னின் நிலை என்ன?:

வடகொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன் சில தீவிர நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  வடகொரியாவின் சர்வாதிகாரி அவரது மோசமான வாழ்க்கை முறையால் கலக்கமடைந்துள்ளதாகவும், இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.  கிம் ஜாங் கடந்த வாரம் தான் 39 வயதை எட்டினார்.  

நீண்ட காலமாக போது மக்களை சந்திக்காமலும் போது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமலும் இருக்கிறார் கிம் ஜாங் உன். இதனால் கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து பல்வேறு யூகங்கள் நிலவி வருகின்றன. 

மருத்துவர் கூறுவதென்ன?:

தென் கொரியாவின் சியோலில் உள்ள வட கொரிய மருத்துவர் சோய் ஜின்வூக், கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து மன அழுத்தத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.  அவர் குடிபோதையில் அடிக்கடி அழுவதாக கேள்விப்பட்டதாக மருத்துவர் ஜினுவாக் கூறியுள்ளார்.  

கிம் ஜாங் உன்னின் மனைவியும் அவரது மருத்துவர்களும் சர்வாதிகாரியை சமாதானப்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் மேலும் அவர் உடற்பயிற்சி செய்யவும் அவரது உடல்நிலையில் கவனம் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் மருத்துவர் ஜின்வூக். என்றாலும் சர்வாதிகாரி இன்னும் யாருடைய அறிவுரைக்கும் செவிசாய்த்ததாக தெரியவில்லை.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்த சே குவேரா மகள்....எதற்காக?