மதுரை பட்டாசு ஆலையில் பெரும் விபத்து...விபத்திற்கான காரணம் என்ன?!

மதுரை பட்டாசு ஆலையில் பெரும் விபத்து...விபத்திற்கான காரணம் என்ன?!

மதுரை திருமங்கலம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 5 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த அழகு சிறை பகுதியில் அனுசுயா தேவி என்பவருக்கு சொந்தமான வி.பி.எம் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.  இந்த ஆலையில் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.  இந்நிலையில் சரவெடி தயாரிக்கும் அறையில் மருந்து கலந்துக் கொண்டிருந்த போது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடித்து சிதறியது. இதில் அருகருகே இருந்த 4 நான்கு கட்டிடங்கள் வெடித்து சிதறியது. 

இந்த கோர விபத்தில் வடக்கன் பட்டியை சேர்ந்த அம்மாசி, வல்லரசு, கோபி, விக்கி, பிரேமா ஆகிய 5 பேர் பரிதாபமாக உடல் சிதறி உயிரிழந்தனர்.  தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் படுகாயமடைந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  மேலும் இடிபாடுகளை அகற்றிய பின்னரே மேலும் யாரும் உயிரிழந்துள்ளனரா என்ற தகவல் தெரியவரும்  என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதையும் படிக்க:    இட ஒதுக்கீடு வேண்டி வழக்கு...விளக்கமளித்த மத்திய அரசு!!