மு.க.அழகிாி - உதயநிதி சந்திப்பு...திருமங்கலம் ஃபார்முலா...ஜெயக்குமாா் கருத்து!

மு.க.அழகிாி - உதயநிதி சந்திப்பு...திருமங்கலம் ஃபார்முலா...ஜெயக்குமாா் கருத்து!
Published on
Updated on
1 min read

திருமங்கலம் பார்முலாவை ஈரோடு தோ்தலிலும் செயல்படுத்தவே அழகிாியை உதயநிதி சந்தித்திருப்பாா் என  முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா் கருத்து தொிவித்துள்ளாா்.

திமுக ஆட்சியின் கையாலாகத்தனத்தை காட்டுகிறது :

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை தண்டையார்பேட்டை சோலையப்பன் தெருவில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா் கலந்து கொண்டு மேடையில் பேசினாா். அப்போது, தமிழ்நாடு முழுவதும் ஒரு புரட்சி ஏற்படுத்தி ஆட்சி பெற்றது அதிமுக  தான். எப்பொழுதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ மாநகராட்சி தேர்தலில் அளவுக்கு அதிகமாக வன்முறைகள் நடக்கிறது. இது திமுக ஆட்சின் கையாலாகத்தனத்தை காட்டுவதாக கூறினார்.

வெற்றி பெறுவதே குறிகோள் :

தொடா்ந்து செய்தியாளா்களிடம் பேசிய அவா், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது, இதனால் அதிமுகவுக்கு சவால் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், கூட்டணியில் இருக்கிறவர்கள் யார் நின்றாலும் எங்களுக்கு கவலை கிடையாது, வெற்றி மட்டுமே எங்களுக்கு குறிக்கோள். அதற்காக கடந்த கால அதிமுகவின் சாதனையையும் தற்போது திமுகவின் வேதனையையும் முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து தேர்தலை எதிர்கொள்வோம் என்று தெரிவித்தார்.

திருமங்கலம் ஃபார்முலா :

இதைத்தொடர்ந்து மு க அழகிரி - உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,  
திருமங்கலம் இடைத்தேர்தலில் சட்டத்துக்கு புறம்பாக வெற்றி பெற்ற பார்முலாவை ஈரோடு இடைத்தேர்தலிலும் செயல்படுத்த திமுக திட்டமிட்டு ஆலோசனை கேட்பதற்காகவே முக அழகிரயை உதயநிதி ஸ்டாலின் சந்தித்து இருப்பார் என  முன்னாள் ஜெயக்குமார் அமைச்சர் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com