பாட்னா சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! எதிா்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பு!!

பாட்னா சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! எதிா்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பு!!
Published on
Updated on
1 min read

பாட்னா சென்றுள்ள முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் இன்று நடைபெறவுள்ள எதிா்கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார். 

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜக தீவிர முனைப்பு காட்டி வருகிறது. அதே சமயம் பாஜகவை எதிர்க்க ஒரு வலுவான எதிரணியை உருவாக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பீகாா் முதலமைச்சா் நிதிஷ்குமார் தலைமையில் பாட்னாவில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் இன்று நடைபெற உள்ள எதிர்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாட்னா சென்றடைந்தாா். அவருக்கு முதலமைச்சர் நிதிஷ்குமார், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடா்ந்து மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் கார்கே, சரத்பவார், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இதற்கிடையே முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பாட்னா பயணம் குறித்து ட்விட் செய்துள்ளாா். இதுகுறித்து அவரது ட்விட்டா் பதிவில், பாசிச, எதேச்சதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, மதச்சார்பற்ற, ஜனநாயக இந்தியாவின் மறுபிறப்பை அனுமதிக்க, சமூக நீதியின் பூமியான இங்கிருந்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் போர் முழக்கம் எழுந்ததில் ஆச்சரியமில்லை என குறிப்பிட்டுள்ளா்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com