உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த ஒன்பது மாதங்களாக கடுமையான போர் நடந்து வருகிறது. போரில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர்.
உக்ரைனில் இருந்து நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் உட்பட லட்சக்கணக்கானோர் வெளியேறியுள்ளனர். ஆனால் இன்னும் 1500 இந்திய மாணவர்கள் அங்கு தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள், இந்திய அரசு தங்களுக்கு முன் எந்த விருப்பத்தையும் வைக்கவிலை என்று குற்றம் சாட்டியுள்ளனர். இதில் சில மாணவர்கள் ஆன்லைனில் படித்து வருகின்றனர்.
உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் எதிர்கால படிப்பு தொடர்பான வழக்கு இன்றளவும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இது தொடர்பான விசாரணை நவம்பர் 1ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களும் விசாரணைக்காக காத்திருக்கின்றனர்.
இந்தியாவில் மருத்துவக் கல்வியை மேற்பார்வையிடும் தேசிய மருத்துவ ஆணையம், ஆன்லைன் வகுப்புகள் மூலம் பெற்ற பட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளது. அதனால் தான் உக்ரைனில் படிப்பதை தவிர வேறு வழியில்லை என்று மாணவர்கள் கூறியுள்ளனர்.
இதனால்உக்ரைனில் சிக்கித் தவிக்கும் 1500 இந்திய மாணவர்கள் தாயகம் திரும்ப மறுத்துள்ளனர். மேலும் பேசிய மாணவர்கள் இங்கேயே படிப்போம் இல்லையேல் இறப்போம் என்று தெளிவாகச் கூறியுள்ளனர்.