'லியோ' இசை வெளியீட்டு விழா ரத்து...!ஏமாற்றத்தில் ரசிகர்கள்!!

வரும் 30-ம் தேதி நடைபெறுவதாக இருந்த லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'லியோ' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 30-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுவதாக இருந்தது.

இதையும் படிக்க : மழைநீா் தேங்கிய பள்ளத்தில் மூழ்கி 2 மாணவிகள் உயிரிழப்பு...!

இந்நிலையில் நிகழ்ச்சியை காண வரும் ரசிகர்களின் பாஸ் கோரிக்கைகள் எதிர்பார்த்ததை விட அதிகமாக வருவதால் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் மற்றும் ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்வதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இசை வெளியீட்டு விழா நடத்தப்போவது இல்லை எனவும் தொிவித்துள்ளது. 

இந்த அறிவிப்பு ‘லியோ’ படத்தின் மீதும், இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் குட்டி ஸ்டோரி சொல்லும் நடிகர் விஜய்யின் பேச்சின் மீதும் எதிர்ப்பார்ப்பில் இருந்த விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக இணையத்தில் பேசப்படுகிறது.