தமிழ்நாட்டில் பல்வேறு கோயில்களில் வெகுவிமர்சையாக நடைபெற்ற குடமுழுக்கு விழா...!

தமிழ்நாட்டில் பல்வேறு கோயில்களில் வெகுவிமர்சையாக நடைபெற்ற குடமுழுக்கு விழா...!
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோயில்களில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். 

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் குடமுழுக்கு விழா வெகுவிமா்சையாக நடைபெற்றது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டம் அ.குரும்பபட்டியில் அமைந்துள்ள வீருநாகம்மாள் கோயிலில்  நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், கோமாதா பூஜை, கன்னி பூஜை, சுமங்கலி பூஜை, விநாயகர் பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது. தொடா்ந்து கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பாக நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனா்.

மயிலாடுதுறை மாவட்டம் தாண்டவன்குளம் நவநீதகண்ணபுரத்தில் உள்ள  நவநீதகிருஷ்ணன் கோயிலில் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்து குடமுழுக்கு விழா வெகுவிமா்சையாக நடைபெற்றது. அதனை முன்னிட்டு மந்திரங்கள் முழங்க கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. தொடா்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமானோா் பங்கேற்று சாமி தாிசனம் செய்தனா்.

இதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் கதவாளம் பகுதியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கை முன்னிட்டு யாகசாலையில் இருந்து கலசங்கள்  மேளதாளங்களுடன் எடுத்து செல்லப்பட்டு கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தாிசனம் செய்தனா். 

மயிலாடுதுறை மாவட்டம் பண்டாரவடையில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கை முன்னிட்டு மகா பூர்ணகுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுர கலசங்களுக்கு ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடைபெற்று ஓராண்டு முடிவடைவதை முன்னிட்டு கோயிலில் நவகலச சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனை முன்னிட்டு கோயில் வளாகத்தில் யாக குண்டம் அமைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டன. மூலவருக்கு பாலசுப்பிரமணியருக்கு வாசனை திரவியங்களால் பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சாமி தாிசனம் செய்தனா். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com