ஆந்திராவில் இந்திய ஒற்றுமை பயணம்...!!!

ஆந்திராவில் இந்திய ஒற்றுமை பயணம்...!!!

இந்திய ஒற்றுமை பயணத்தின் கீழ் ராகுல் காந்தி மற்றும் தொண்டர்கள் இன்று ஆந்திராவுக்கு சென்றனர். 

காங்கிரஸின் இந்திய ஒற்றுமை பயணம் இன்று ஆந்திரா சென்ற ராகுல் காந்தி மற்றும் தொண்டர்களை ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் சாகே செல்ஜநாத் மற்றும் பிற மூத்த தலைவர்கள் வரவேற்றனர்.  

இன்றைய நடைபயணத்தில், ராகுல் காந்தி ஆந்திராவின் ஆலுரு, ஹட்டி பெளகல் மற்றும் முனிகுர்த்தி ஆகிய பகுதிகளில் நடைபயணம் மேற்கொள்கிறார். அதன் பிறகு அதோனியின் சாகி கிராமத்தில் இரவு ஓய்வெடுக்கிறார். இந்த நடைபயணம் ஆந்திராவில் அக்டோபர் 21ம் தேதி வரை தொடரும்.  அதன் பிறகு தெலுங்கானா வழியாக மீண்டும் கர்நாடகாவிற்குள் நுழையும்.

                                                                                                      -நப்பசலையார்

இதையும் படிக்க:   பிரதமர் கனவை நிறைவேற்றுவாரா நிதிஷ் குமார்?!!