வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்...முதலில் தடுமாறிய இந்திய அணி...இறுதியில் கைப்பற்றியது எப்படி?

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்...முதலில் தடுமாறிய இந்திய அணி...இறுதியில் கைப்பற்றியது எப்படி?
Published on
Updated on
1 min read

வங்கதேச அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக கைப்பற்றியது.

இந்திய அணி வெற்றி:

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, அந்நாட்டுடன் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று விளையாடியது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை, 2க்கு 1 என்ற புள்ளிகள் கணக்கில் வங்கதேசம் கைப்பற்றியது. இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 188 ரன்களில் அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து, 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 22-ம் தொடங்கியது. 

இதில், முதலில் விளையாடிய வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 314 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் 87 ரன்கள் முன்னிலை பெற்றது. 2-வது இன்னிங்சில் தொடங்கிய வங்க தேசம் 231 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து இந்திய அணிக்கு 145 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆனால், 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அஸ்வின், ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய அணியை வெற்றிபெறச் செய்தது. இந்த வெற்றியின் மூலம், வங்கதேச அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியை 2 - 0 என்ற கணக்கில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com