ஏசு கிறிஸ்து பிறந்தநாள்...கொண்டாட்டத்தில் மக்கள்...!

ஏசு கிறிஸ்து பிறந்தநாள்...கொண்டாட்டத்தில் மக்கள்...!
Published on
Updated on
1 min read

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு முதல் மக்கள் திருப்பலியில் ஈடுபட்டு வருகின்றனர். 

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்:

ஏசு கிறிஸ்து 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் 25-ந் தேதி பெத்லகேம் என்னும் ஊரில் பிறந்தார். இந்த நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். 

அதன்படி சென்னை எழும்பூர், பெசன்ட்நகர் அன்னை வேளாங்கன்னி ஆகிய பகுதிகளில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில், திரளானோர் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இதேபோல் நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் உள்ள புனித சவேரியாா் திடலில், இரவு 11.45 மணிக்கு மறையுரை, கூட்டுத் திருப்பலியுடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதேபோன்று குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி தேவாலயங்கள்  மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழா கோலாகலம் பூண்டன. தொடர்ந்து, இரவு நேரத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் கிறிஸ்துமஸ் ஆராதனைகளும் நடைபெற்றது.

அதேபோன்றும் திருச்சி, மேலப்புதூர் தூய மரியன்னை பேராலயத்தில் திருச்சி மறைமாவட்ட ஆயர் ஆரோக்கியராஜ் தலைமையில் திருப்பலி நடைப்பெற்றது. பின்னர் திருப்பலியில் கலந்துக்கொண்ட கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியுடன் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். 

இதேபோன்று  புதுச்சேரியில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி நடத்தி வரும் நபர் உட்பட 4 பேர் காந்தி சிலையிலிருந்து கடலில் ஆறு கிலோமீட்டர் தூரம் சென்று கடலுக்கு அடியில் 60 அடி ஆழத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com