”இந்தியா ஜெர்மனிக்கு இயற்கையான பங்காளி...” ஜெர்மனியின் அன்னலெனா!!!

”இந்தியா ஜெர்மனிக்கு இயற்கையான பங்காளி...” ஜெர்மனியின் அன்னலெனா!!!
Published on
Updated on
1 min read

இந்த துடிப்பான உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாகவும், ஆசியாவில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் சக்தியாகவும் உள்ளது.  கொந்தளிப்பான கடல்களை ஒன்றாக கடப்பதற்கு இந்தியா இயற்கையான பங்காளியாக உள்ளது. 

இயற்கையான பங்காளி:

ஜெர்மனியின் இயற்கையான பங்காளியாக இந்தியாவை வர்ணித்துள்ளார் ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னலெனா பேயர்பாக்.  கொரோனா தொற்றுநோய் மற்றும் உக்ரைன் மோதலால் உலகம் நிச்சயமற்ற நிலையை எதிர்கொண்டுள்ளதால், இந்த கொந்தளிப்பான கடலை போன்ற சூழலில் முன்னேறி செல்ல இந்தியா ஜெர்மனியுடன் நடக்கும் என்று நம்புவதாக அன்னலெனா பேயர்பாக் கூறியுள்ளார்.  

ஒன்றாக கடப்போம்:

இந்த துடிப்பான உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும், ஆசியாவில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் வளர்ந்து வரும்  சக்தியாகவும் இந்தியா திகழ்கிறது என்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில் அன்னலெனா தெரிவித்துள்ளார்.  கரடுமுரடான பாதைகளை ஒன்றாக கடக்க எங்களுக்கு இந்தியா துணை நிற்கும் என நம்புகிறோம் எனவும் ஏனெனில் கரடுமுரடான பாதைகளில் பயணம் செய்யப் போகிறீர்கள் என்றால், நிச்சயமாக கூட்டாளிகளை நம்ப வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மக்கள் பாதுகாப்பு:

மேலும், நீங்கள் ஒருவரை நம்பினால், எல்லாவற்றிலும் ஒரே கருத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை எனவும் ஆனால், உங்கள் மிக முக்கியமான மதிப்புகள், உங்கள் மிக முக்கியமான நம்பிக்கைகள் என்று வரும்போது, ​​நீங்கள் அதே சிந்தனையைப் பகிர்ந்து கொள்வது முக்கியம் எனவும் தெரிவித்துள்ளார்.  இந்தியாவும் ஜெர்மனியும் இணைந்து தங்கள் மக்களுக்கு பாதுகாப்பை வழங்குவது முக்கியம் என்றும் அன்னலெனா வலியுறுத்தியுள்ளார். 

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com