உலகிற்கு முன்மாதிரியான இந்தியா...ஜெர்மனி நெகிழ்ச்சி!!!

உலகிற்கு முன்மாதிரியான இந்தியா...ஜெர்மனி நெகிழ்ச்சி!!!
Published on
Updated on
1 min read

சீனாவுடனான இந்தியாவின் உறவுகள் மற்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரின் வீழ்ச்சி ஆகியவை திங்களன்று வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மற்றும் அவரது ஜேர்மனியப் பிரதிநிதி அன்னலெனா பியர்பாக் ஆகியோருக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளில் காணப்படலாம். 

ஜெர்மனியுடன் வெளியுறவு:

ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னலெனா பியர்பாக் இரண்டு நாள் பயணமாக இன்று இந்தியா வந்தடைந்துள்ளார்.  அவர் வெளியுறவு துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்து பேசியுள்ளார்.  டெல்லிக்கு செல்வதற்கு முன், இந்தியா வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாகவும், உறுதியான ஜனநாயக நாடாகவும் உள்ளது என்று கூறியிருந்தார் அன்னலெனா. 

முன்மாதிரி இந்தியா:

அனைத்து உள் மற்றும் சமூக சவால்கள் இருந்தபோதிலும், இந்தியா உலகின் பல நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாகவும் பாலமாகவும் இருப்பதாக கூறியுள்ள அன்னலெனா இந்தியாவும் ஜெர்மனியின் இயற்கையான பங்காளிகளாகும் எனவும் தெரிவித்துள்ளார்.  வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மற்றும் ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் அன்னலெனா பியர்பாக் இடையே இருதரப்பு விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அன்னலெனா ட்விட்டர்:

ஜெர்மனி G7 அமைப்பின் தலைமை பதவியில் இருக்கும் கடைசி மாதத்திலும் இந்தியா G20 தலைவராக பொறுப்பேற்ற சில நாட்களிலேயும் இந்த சந்திப்பு நடந்துள்ளது எனவும் இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கிடையேயான மிக அவசரமான பணிகளில் கவனம் செலுத்தும் எனவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

காலநிலை நெருக்கடியைச் சமாளிக்கவும், விதிகளின் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கைப் பராமரிக்கவும் இரு நாடுகளும் இணைந்து செயல்படும் என்றும் ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சகத்துடன் உலகளாவிய பங்கை வகிக்க இந்தியா தயாராக உள்ளது எனவும் அன்னலெனா பியர்பாக் கூறியுள்ளார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com