”மக்களுக்கு உதவுவதே திருப்தி அளிக்கிறது...” நடிகர் சோனு சூட்!!

”மக்களுக்கு உதவுவதே திருப்தி அளிக்கிறது...” நடிகர் சோனு சூட்!!

Published on

ஆயிரம் கோடி ரூபாய் படத்தில் நடிப்பதைவிட மக்களுக்கு உதவுவதே அதிக திருப்தி அளிப்பதாக நடிகர் சோனு சூட் கூறியுள்ளார். 

அசாம் மாநிலம் கொக்ராஜ்ஹர் நகரில் நடைபெற்ற மக்கள் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களோடு உரையாடினார்.  அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கொரோனா வைரஸ் தாக்கத்தின் போது பொதுமக்களுடன் இணைய வாய்ப்பு கிடைத்ததாக தெரிவித்துள்ளார். 

மேலும் தெரிந்தோ தெரியாமலோ மக்களுக்கு செய்யும் உதவி அவர்களிடையே மகிழ்ச்சியை கொண்டு வந்ததாகவும் அதற்கு பதிலாக அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றதாகவும் கூறியுள்ளார்.  ஆயிரம் கோடி ரூபாய் படத்தில் நடிப்பதைவிட மக்களுக்கு உதவுவதே அதிக திருப்தி அளிப்பதாக நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com