கொடைக்கானல் மலைப்பகுதியில் தடை செய்யப்பட்ட ஜேசிபி இயந்திரங்கள் உள்ளிட்டவைகள் இயங்குவதால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் மலைத்தள விதிகளின் அடிப்படையில் ஜேசிபி ஹிட்டாச்சி உள்ளிட்ட கனரக வாகனங்கள் இயக்குவதற்கு தடை உள்ளது. விவசாய பயன்பாட்டிற்கு மட்டுமே இந்த இயந்திரங்கள் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட அனுமதி பெற்ற பின்னரே குறிப்பிட்ட நாட்களுக்குள் இந்த இயந்திரங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
ஆனால் சமீப காலத்தில் வணிக பயன்பாட்டிற்கும் மலைகளை உடைத்து சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களுக்கும் இந்த கனரக வாகனங்களான ஜேசிபி ஹிட்டாச்சி அதிகரித்து வருகிறது. குறிப்பாக வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அட்டுவம்பட்டி பகுதி மற்றும் நகர் பகுதியில் ஒட்டி உள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் அதிகாரிகளின் துணையுடன் இந்த இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் கொடைக்கானல் மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே கொடைக்கானலில் ஹிட்டாச்சி ஜேசிபி இயந்திரங்கள் இயக்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தடையை மீறி இயக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களும் இயற்கை ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிக்க: மோசடி செய்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர்...!