
திருவாரூர் | இன்று தஞ்சை சரக டிஐஜி கயல்விழி காலை முதல் பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார் இதனை முன்னிட்டு போலீசாரின் அனைவருக்கும் மரியாதை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து போலீசாரின் வாகனங்கள் பராமரிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பல்வேறு ஆய்வு பணிகள் மேற்கொண்டார். இறுதியாக திருவாரூர் மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்கள் சுமார் 9இலட்சத்து 64ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை மீட்டு அதனை டிஐஜி கயல்விழி பாதிக்கப்பட்டவர்களிடம் வழங்கினார்.
மேலும் படிக்க | கோவில் அனைவருக்கும் சமமானது - அமைச்சர் சேகர்பாபு பேச்சு
அப்போது அவர்களிடம் பொதுமக்கள் ஏழை எளிய மக்கள் வரை செல்போன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் செல்போன்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே பறிக்கப்படும் நிலை உள்ளது எனவே பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என டிஐஜி கயல்விழி அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் மற்றும் ஏராளமான காவல் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.