கோவில் அனைவருக்கும் சமமானது - அமைச்சர் சேகர்பாபு பேச்சு

கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை தீபம் அன்று ஓ.பி.எஸ் மகனுக்கு தனிப்பட்ட முறையில் மரியாதை கொடுக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது.
கோவில் அனைவருக்கும் சமமானது - அமைச்சர் சேகர்பாபு பேச்சு
Published on
Updated on
1 min read

செய்தியாளர்கள் சந்திப்பு

சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் திருப்பணிகள் தொடர்பாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்றைய தினம் நேரில் ஆய்வு செய்தார். அதற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சேகர்பாபு, மயிலாப்பூர் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் 18 ஆண்டுகள் திருப்பணிகள் மேற்கொள்ளாமல் இருந்தது. இனி கும்பாபிஷேகம் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு அரசு நிதியுதவி

பழமையான கோவில்களுக்கு தமிழ்நாடு அரசு நிதியுதவி வழங்கி இருக்கிறது, முதல்வர் இதற்கான அறிவுறுத்தல் செய்து இருக்கிறார். ஆண்டு கணக்கில் கும்பாபிஷேகம் செய்யாத ( மதுரை, திருவட்டாறு இடம் )  கோவிலில் பணிகள் நடக்க இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் இதுபோல் கணக்கெடுப்பு நடத்தி நடவடிக்கை எடுப்போம்.

திருவண்ணாமலை தீபம்

திருவண்ணாமலை தீபத்திற்கு 25 லட்சம் பக்தர்கள் வந்தார்கள். அனைத்து வசதியும் செய்யப்பட்டு பாதுகாப்பாக நடத்தி முடித்து இருக்கிறோம். புயல் கரையை கடந்த பிறகு சேப்பாக்கம், பாரிமுனை பகுதியில் இருக்கும் கோவிலில் சேதம் இருந்தது. இதற்கான பணிகளுக்கு துறையின் ஆணையர்  நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

கண்ணகி கோவில்

தமிழ்நாடு கேரளா எல்லையில் கண்ணகி கோவிலில் பொதுமக்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். அறநிலையத்துறை வசம் கொண்டு வருவது குறித்து கேரள அரசுடன் இணைந்து கூடுதல் நடவடிக்கை எடுப்போம்.

கோவிலில் அனைவரும் சமம்

அறநிலை துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் வி.ஐ.பி. பாஸ் குறைத்து இருக்கிறோம். கோவில் அனைவருக்கும் சமமானது என நடவடிக்கை எடுத்து வருகிறோம். தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை தீபம் அன்று ஓ.பி.எஸ் மகனுக்கு தனிப்பட்ட முறையில் மரியாதை கொடுக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது,விசாரணையை பொறுத்து  நடவடிக்கை எடுக்கப்படும்.

 62 சிலைகள் மீட்பு

பல்வேறு நாடுகளில் இருந்து  62 சிலைகள் மீட்கப்பட்டு இருக்கிறது. திமுக அரசு ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு சிலை மீட்பு பணிகள் வேகப்படுத்தி இருக்கிறோம். காணாமல் போன சிலைகளை மீண்டும் திருக்கோவிலுக்கு வைப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு செய்தியாளர் சந்திப்பின் போது இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com