4-வது வாரமாக நடைபெற்ற HAPPY STREET நிகழ்ச்சி...உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்த பொதுமக்கள்!

4-வது வாரமாக நடைபெற்ற HAPPY STREET நிகழ்ச்சி...உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்த பொதுமக்கள்!

சென்னை, அண்ணா சாலையில் நடைபெற்ற HAPPY STREET  நிகழ்ச்சியில் பொதுமக்கள் உற்சாகமாக நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பரபரப்பாக இயங்கும் சென்னை அண்ணாசாலையில், LIC அருகே நான்காவது வாரமாக நடைபெற்ற HAPPY STREET  நிகழ்ச்சியில் கயிறு இழுத்தல், கோலப் போட்டி என பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் மற்றும் யோகா, உடற்பயிற்சிகள், செல்ல பிராணிகளின் கண்காட்சி உள்ளிட்டவை  நடைபெற்றது.

இதையும் படிக்க : "2000 ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பதை வரவேற்கிறோம்..! " - பி. ஆர். பாண்டியன்.

மேலும், ஸ்கேட்டிங், கூடைப்பந்து, சைக்கிளிங், நடனம்  என பல பொழுது போக்கு விளையாட்டுகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் விளையாடி மகிழ்ந்தனர். அதேபோல், ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்கள் பாடல்களின் இசைக்கு ஏற்றார் போல் உற்சாகமாக நடனம் ஆடி மகிழ்ந்தனர்.