ஆளுநரின் தேநீர் விருந்து...புறக்கணித்த கூட்டணி கட்சிகள்...பங்கேற்ற முதலமைச்சர்...!

ஆளுநரின் தேநீர் விருந்து...புறக்கணித்த கூட்டணி கட்சிகள்...பங்கேற்ற முதலமைச்சர்...!

குடியரசு தினத்தையொட்டி, சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஆளுநர் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொண்டார்.

ஆளுநர் தேநீர் விருந்து :

குடியரசு தினத்தை ஒட்டி அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் தேநீர் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க ஆளுநர் மாளிகை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. தேநீர் விருந்தை திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசி வாயிலாக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். 

இந்த நிலையில் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்றார். மேலும் அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு  ஆகியோர் பங்கேற்றனர். 

இதையும் படிக்க : விழாக்கோலம் பூண்ட பழனி...குவியும் திரளான பக்தர்கள்...!

அதேபோல் தேநீர் விருந்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக எம்எல்ஏ-க்களும் பங்கேற்றனர். அதிமுக சார்பில் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்ட நிலையில் ஓபிஎஸ் தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை.

மேலும் தேநீர் விருந்தில் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா கலந்து கொண்ட நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அவரது மகள் ஐஸ்வர்யாவுடன் கலந்துக் கொண்டார்