விழாக்கோலம் பூண்ட பழனி...குவியும் திரளான பக்தர்கள்...!

விழாக்கோலம் பூண்ட பழனி...குவியும் திரளான பக்தர்கள்...!

திண்டுக்கல் மாவட்டம் பழனி மலை முருகன் கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பின் இன்று காலை 8:15 மணிக்கு குடமுழுக்கு நடைபெறுவதால் அங்கு விழாக்கோலம் பூண்டுள்ளது. 

பழனி கோவில் குடமுழுக்கு விழா :

தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. சிறப்பு வாய்ந்த பழனி முருகன் கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா் கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். 

ஆனால் பழனி முருகன் கோவிலில் கடந்த 2018-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெறவில்லை. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இதை தொடர்ந்து இன்று பழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு நடைபெறுகிறது. 

குடமுழுக்கையொட்டி, இன்று காலை 4.30 மணிக்கு 8-ம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, காலை 7.15 மணிக்கு பெருநிறை வேள்வி, தீபாராதனை, கட்டியம், கந்தபுராணம், பன்னிரு திருமுறை விண்ணப்பம் ஆகியவை நடைபெற்றது. 

இதையும் படிக்க : டீ பிரியர்களின் கவனத்திற்கு... டீ யில் இவ்வளவு வகை இருக்குங்க ?

இதையடுத்து,  காலை 8.15 மணிக்கு மங்கல இசையுடன் யாகசாலையில் இருந்து சக்தி கலசங்கள் புறப்பாடு நடைபெற இருக்கிறது. அதைத்தொடர்ந்து தண்டாயுதபாணி சுவாமியின் ராஜகோபுரம், தங்கவிமானத்தில் உள்ள கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா குடமுழுக்கு நடைபெறவுள்ளது. 

தொடர்ந்து காலை 9.15 மணிக்கு மூலவர் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. பின்னர் மதியம் 12.05 மணிக்கு அன்னப்படையல், தீபாராதனை, திருமறை, சிவஆகமம், கட்டியம், கந்தபுராணம், திருமுறை விண்ணப்பம் பாடப்படுகிறது. 

இந்நிலையில், 16 ஆண்டுகளுக்கு பிறகு பழனியில் கோலாகலமாக குடமுழுக்கு நடைபெற உள்ளதால் பக்தர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.