இந்திய வரலாற்றில் முதல் முறையாக...ஒரே நேரத்தில் மூன்று நிறுவனங்கள்!!!

இந்திய வரலாற்றில் முதல் முறையாக...ஒரே நேரத்தில் மூன்று நிறுவனங்கள்!!!
Published on
Updated on
1 min read

கோவாவில் தேசிய ஆயுர்வேத நிறுவனம், காஜியாபாத்தில் யுனானி தேசிய நிறுவனம் மற்றும் டெல்லியில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோமியோபதி ஆகியவை தொடங்கப்படும் என்று மத்திய ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மருத்துவ நிறுவனங்கள்: 

முதன்முறையாக இந்தியா ஒரே நேரத்தில் மூன்று மருத்துவ நிறுவனங்களைப் பெறப் போகிறது.  இந்த நிறுவனங்களில் ஆயுர்வேதம் முதல் யுனானி மற்றும் ஹோமியோபதி மருத்துவம் வரை நோயாளிகள் கல்வியுடன் சிகிச்சை பெறவுள்ளனர்.  கோவா, டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தின் காஜியாபாத் ஆகிய இடங்களில் நிறுவப்படவுள்ள இந்த கல்வி நிறுவனங்களை, டிசம்பர் 8 முதல் 11 வரை கோவாவில் நடைபெறும் 9வது உலக ஆயுர்வேத மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்.  

வழிநடத்தும் இந்தியா:

கோவாவில் தேசிய ஆயுர்வேத நிறுவனம், காஜியாபாத்தில் யுனானி தேசிய நிறுவனம் மற்றும் டெல்லியில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோமியோபதி ஆகியவை தொடங்கப்படும் என்று மத்திய ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இவை அனைத்திலும் நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கு ஒரு மருத்துவமனையும் இருக்கும் எனவும் கூறியுள்ளது.  

மத்திய ஆயுஷ் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் கூறும்போது, பிரதமர் நரேந்திர மோடி புதிய ஆயுஷ் அமைச்சகத்தை உருவாக்கி, குறுகிய காலத்தில் பட்ஜெட்டை 6 மடங்கு உயர்த்தி பல முக்கிய முடிவுகளை எடுத்து இந்தியாவின் பாரம்பரிய மருத்துவத்தை மேம்படுத்தியுள்ளார் எனக் கூறியுள்ளார்.  மேலும் தற்போது நமது பொறுப்பை உணர்ந்து பாரம்பரிய மருத்துவ வழியில் உலகை வழிநடத்தி வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com