அரசியல் சாசன அமர்வில், விளையாட்டு போட்டியை கலாச்சார நிகழ்ச்சியாகவும் நடத்தலாம் என்றும், ஜல்லிக்கட்டில் காளைகளுக்கு எந்த கொடுமையும் செய்யக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
தவறான கருத்து:
தமிழ்நாட்டில் காளைகளை அடக்கும் விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் சட்டத்தை தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் ஆதரிக்கும் விதமாக விளையாட்டு அல்லது பொழுதுபோக்கு அம்சங்கள் கலாச்சார மதிப்பைக் கொண்டிருக்க முடியாது என்பது தவறான கருத்து என்று கூறியுள்ளது.
விதி மீறல் இல்லை:
ஜல்லிக்கட்டுக்கு 'ஏறுதழுவுதல்' என்ற பெயரும் உண்டு. இது தமிழ்நாட்டில் பொங்கல் அறுவடை திருநாளை முன்னிட்டு நடத்தப்படுகிறது. தமிழ்நாடு அரசு கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த எழுத்துப்பூர்வ அறிக்கையில், ஜல்லிக்கட்டு என்பது மதம் மற்றும் கலாச்சாரம் சார்ந்த விழா என்றும், இது மாநில மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் கூறியதோடு ஜல்லிக்கட்டு ஒருபோதும் விலங்குகள் வதை தடுப்பு விதிகளை மீறாது என்றும் தெரிவித்துள்ளது.
ஆதரிக்கிறோம்:
ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயத்தை அனுமதிக்கும் தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா சட்டங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஒருநாள் முழுவதும் நடந்த விசாரணையில், மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டின் சட்டங்களை முழுமையாக ஆதரிப்பதாக உச்சநீதிமன்ற அமர்வு முன் தெரிவித்துள்ளார்.
-நப்பசலையார்