கொடைக்கானலில் பூத்து குலுங்கும் தீ தடுப்பு மலர்கள்...!!!

கொடைக்கானலில் பூத்து குலுங்கும் தீ தடுப்பு மலர்கள்...!!!

Published on

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பருவ நிலைக்கு ஏற்ப பல்வேறு மலர்கள் பூத்து குலுங்குகின்றது.  இவ்வாறாக பூத்து குலுங்கும் மலர்களை பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.  தற்போது மார்ச் ஏப்ரல் மாத சீசன் நேரங்களில் வெயில் அதிகரித்து காணப்படும். 

இந்த நிலையில்  மரங்கள் மற்றும் செடிகள் காய்ந்து காணப்படும்.  ஆனால் தீ தடுப்பு மலர்கள் என அழைக்கப்படும் மலர்கள் தற்போது கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் பூத்து குலுங்குகிறது.  காட்டு தீ ஏற்படும் நேரங்களில் தீ தடுப்பாகவும் இருந்து வருகிறது.  

எனவே வனப்பகுதியில் காட்டு தீ ஏற்படாத வண்ணம் பிற மரங்களான யூகாலிப்ட்ஸ் , பைன் உள்ளிட்ட மரங்களை அகற்றி இது போன்ற சோலை மரங்களை வனத்துறையினர் நடவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com