”மத்தியப்பிரதேசம் சென்றால்கூட பிரதமருக்கு நினைவில் வருவது திமுகதான்” - முதலமைச்சர் பேச்சு!

”மத்தியப்பிரதேசம் சென்றால்கூட பிரதமருக்கு நினைவில் வருவது திமுகதான்” - முதலமைச்சர் பேச்சு!
Published on
Updated on
1 min read

மத்தியில் ஆளும் பாஜக அரசு, மதம் மற்றும் சனாதனக் கருத்துகளை மக்களிடம் திணிப்பதாக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

மருத்துவர் ஜெயராஜ மூர்த்தியின் இல்லத் திருமண விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இத்திருமணத்தில் முதலமைச்சர் மற்றும் துர்கா ஸ்டாலின் இருவரும் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தனர். 

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வள்ளலார் குறித்து ஒருவர் உளறிக் கொண்டிருக்கிறார் என்று ஆளுநரை சூசகமாக விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், மதத்தையும், சனாதனக் கருத்துகளையும் மக்களிடத்தில் திணித்து சர்வாதிகார ஆட்சியை செய்துவரும் மத்திய பாஜக அரசு, அவர்களை எதிர்ப்பவர்களை கொடுமைப் படுத்தவே பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சிப்பதாக புகார் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், மத்தியப்பிரதேசம் சென்றால்கூட பிரதமருக்கு திமுக தான் நினைவில் வருகிறது என்று கிண்டலடித்த முதலமைச்சர், அங்கே போய் குடும்பத்திற்காக ஆட்சி நடத்துவதாக பிரதமர் பேசுகிறதை குறிப்பிட்டவர், ஆம் இது குடும்ப கட்சிதான், தமிழ்நாடே தி.மு.க. குடும்பம் தான் என்று அழுத்தம் திருத்தமாக கூறினார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com