ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நிறைவடைவதால் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், அ.தி.மு.க., தே.மு.தி.க., நாம்தமிழர் கட்சி போட்டியிடுவதால் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இவர்களை தவிர 73 சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
இதைப்போலவே அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் ஆகியோரும் பிரசாரம் செய்தனர். பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைவதால் கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் கட்சி தொண்டர்களும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்க: தொடங்கியது டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு...!!