துருக்கி – சிரியா எல்லைப் பகுதியில் நள்ளிரவில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கத்ததால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தெற்கு துருக்கி மற்றும் சிரியா எல்லையில் 2 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் இரு வேறு இடங்களில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 மற்றும் 5.8 ஆக பதிவாகியுள்ளது. இதனால் அச்சம் அடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். எனினும், கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தெற்காசிய நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ஆம் தேதி அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களின் வாழ்க்கையை முற்றிலும் புரட்டிப் போட்டது. ரிக்டர் அளவுகோளில் 7.8ஆக பதிவான அந்த நிலநடுக்கத்தால் 10-க்கும் மேற்பட்ட மாகாணங்கள் உருகுலைந்து போயின. கட்டிடங்கள் தரைமட்டம் ஆனதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கியது.
இந்தியா சார்பில் பேரிடர் மீட்பு படையினர் துருக்கி மற்றும் சிரியாவில் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். சொந்த நாட்டிலேயே மக்கள் அகதிகளாகிப் போன இந்த இயற்கை பேரிடரின் மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.