அரைகுறையாக நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள்.... பாக்கெட் சாராயத்திற்கு பேனா சிலையா?!!

அரைகுறையாக நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள்.... பாக்கெட் சாராயத்திற்கு பேனா சிலையா?!!
Published on
Updated on
1 min read

பாக்கெட் சாராயத்தை அறிமுகப்படுத்தியவருக்கு பேனா சிலை வைக்க முயற்சித்து வருவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். 

தேர்தல் பிரசாரம்:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே எஸ் தென்னரசுவை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.  அப்போது பேசிய அவர், விழுப்புரம் அன்பு இல்லத்தில் நிகழும் கொடுமையை விட அதிகமாக ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்களை அடைத்து வைத்துள்ளதாக கூறினார்.  தற்போது வரை ஐந்தாயிரம் பட்டிகளில் மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

அரைகுறையாக..:

திமுக அரசு 49 வாக்குறுதிகளை மட்டுமே அரைகுறையாக நிறைவேற்றியுள்ளதாகவும்  திமுக கூட்டணியினர் வழங்கும் தரமற்ற குக்கரை வாங்கினால் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உருவாகும் என்றும் கூறியுள்ளார்.

கட்டப்பஞ்சாயத்து:

திமுக ஆட்சி அமைத்த பிறகு சாதாரணமாக கொலைகள் நடைபெற்று வருவதாகக் கூறிய அவர்,  காவல்துறையின் கைகளை கட்டிப்போட்டு, தங்களது  கட்டப் பஞ்சாயத்துகளுக்கு மட்டும்  திமுக பயன்படுத்தி வருவதாகவும் பேசியுள்ளார். 

குடும்ப அரசியல்:

அதிமுக மற்றும் பாஜகவில் அடிமட்ட தொண்டர்கள் கூட தலைவர்களாக வர முடியும் என்றும் திமுகவில் ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி போன்றோருக்கு கருணாநிதியின் குடும்பத்தினர் என்பதை தவிர வேறு என்ன  தகுதி உள்ளது என்றும் கேள்வி எழுப்பினார். 

பேனா சிலை?:

கலைஞர் கருணாநிதி ஆட்சி காலத்தில் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சாராயம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டதாக கூறிய அண்ணாமலை பாக்கெட் சாராயம் கொண்டு வந்தவருக்கு பேனா சிலை அவசியமா என கேள்வியெழுப்பியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com