துருக்கியில் பூகம்ப ஒத்திகையை தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கம்....!
துருக்கியில் இன்று காலை உள்ளூர் நேரப்படி அதிகாலை 4:08 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துருக்கியின் வடமேற்கு மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் இஸ்தான்புல் மற்றும் அங்காரா நகரங்களில் அதிக அளவு உணரப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சர் தகவல்:
துருக்கி உள்துறை அமைச்சர் சுலைமான் சோய்லு கூறுகையில், இதுவரை உயிர்ச்சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை எனவும் நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே இஸ்தான்புல்லில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பூகம்ப ஒத்திகை:
இதற்கு முன்னதாக, 1999 ஆம் ஆண்டு துருக்கியின் டுஜ்ஸ் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் 23 வது ஆண்டு நினைவு நாளில் துருக்கி நாடு தழுவிய பூகம்ப ஒத்திகையை நடத்தியது. ஒத்திகை நடத்தி சரியாக 10 நாட்களுக்குப் பிறகு அதே பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துருக்கியில் 1999ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 710 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-நப்பசலையார்
இதையும் படிக்க: இந்தியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள்...!